புதுச்சேரி

புதுச்சேரியில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகள்

புதுச்சேரி, அக்டோபர் 20: புதுச்சேரி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 19-வது முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகள் நிறைவுபெற்றன.

புதுச்சேரி கேரம் அகாடமி மற்றும் பாரதி பவுண்டேஷன் சார்பில் கடந்த 16 ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெற்றது. கேரம் அகாடமி நிறுவனர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சங்கத்தின் செயலாளர் சதீஷ் மற்றும் பாரதி பவுண்டேஷன் நிறுவனர் ராஜகோபாலசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக் மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என ஐந்து வயது முதல் 60 வயது வரை உள்ள ஆறு பிரிவுகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டிகளின் நிறைவில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தற்காலிக சபாநாயகருமான அ.அன்பழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்குக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவுடைநம்பி, கார்த்திக், சஞ்சய் மற்றும் பரத் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன