காரைக்கால்

எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் பிறந்தநாள்: காரைக்கால் பூவம் காமராஜர் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரனின் பிறந்தநாளை முன்னிட்டு, பூவம் பகுதியில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மக்கள் மருத்துவருமான டாக்டர் வி. விக்னேஸ்வரன் வரும் அக்டோபர் 12-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தொகுதி மக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் பூவம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சட்டமன்ற உறுப்பினரின் நல்வாழ்வு மற்றும் தொகுதி மக்களின் நலன் வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நேரில் வருகை தந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார். மேலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று ஊக்கமளித்துப் பேசினார்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியப் பெருமக்கள், கல்வித்துறை அலுவலர்கள், ஊர் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தனது பிறந்தநாளை ஆடம்பரமின்றி மாணவர்களுக்கான கல்வி நலத்திட்ட உதவிகளுடன் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினருக்கு ஆசிரியர்களும் பொதுமக்களும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன