புதுச்சேரியில் அக்.10 அன்று பிரம்மாண்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 2000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

புதுச்சேரி, அக். 07: புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப்பு இயக்குநர் கே.சி. சுரேந்தர், இ.ஆ.ப. வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், புதுச்சேரி, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 40 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி அன்று புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறும். இதில் Integra, Supreme Industries, Datamatics, TVS Lucas, Manatec, Leo Fasteners உள்ளிட்ட பல்வேறு முன்னணி பெருநிறுவனங்கள் கலந்து கொண்டு 2,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ. (ITI), டிப்ளமோ (Diploma), இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகள் (Engineering, Arts, Science, Commerce, Pharmacy, Nursing, Education), எம்பிஏ (MBA) உள்ளிட்ட அனைத்து கல்வித் தகுதி உடையோரும் கலந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume) 10 நகல்கள் மற்றும் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் முகாமில் நேரில் பங்கேற்று பயனடையுமாறு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.