நல்லாத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு-கோட்டுச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லாத்தூர் பகுதியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்கள் பகுதி சார்ந்த பல்வேறு அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளை எடுத்துரைத்தனர்.
நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ‘மக்கள் மருத்துவர்’ டாக்டர் V. விக்னேஸ்வரன் MBBS அவர்கள் இக்கூட்டத்தில் நேரில் கலந்துகொண்டார். அப்போது கிராம மக்கள் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, மின்விளக்கு வசதிகள் மற்றும் வடிகால் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்புத் தேவைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்து அவரிடம் விரிவாக மனுக்கள் அளித்தும், வாய்மொழியாகவும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
மக்களின் கோரிக்கைகளை பொறுமையுடன் கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன், அங்கிருந்த சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளிடம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகச் சுட்டிக்காட்டினார். பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை உரிய முறையில் பரிசீலித்து, காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், நல்லாத்தூர் கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அரசு அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


