அரசியல்

3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் சீன அதிபர் சீ ஜின்பிங்: அதிபர் டிரம்ப் உற்சாக வரவேற்பு!

வாஷிங்டன்: சீன அதிபர் திரு. சீ ஜின்பிங், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்குள்ள ஜாயிண்ட் பேஸ் ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் திரு. டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி திருமதி. மெலனியா டிரம்ப் ஆகியோர் நேரில் சென்று, சீன அதிபர் சீ ஜின்பிங் மற்றும் அவரது மனைவி திருமதி. பெங் லியுவான் ஆகியோரை முறைப்படி வரவேற்றனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த சந்திப்பு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த மூன்று நாள் பயணத்தின் போது, வெள்ளை மாளிகையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்ச்சி, அரசு விருந்து, தனிப்பட்ட தேநீர் விருந்து மற்றும் அமெரிக்க தேசிய ஆவணக் காப்பகப் பார்வை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளில் சீன அதிபர் பங்கேற்கிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன