தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: விஜய் வசந்த் எம்.பி. ஆவேசம்!
சென்னை:
வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறித்து முறைகேடுகளில் ஈடுபடும் பாஜக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காங்கிரஸ் முக்கிய தலைவர் திரு. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தின் அடிப்படை அமைப்பான தேர்தல் ஆணையம் ஆளும் மத்திய பாஜக அரசின் தவறுகளுக்குத் துணைபோவதாகவும், வாக்காளர்களின் உரிமையை நிலைநாட்ட ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கவும், தேர்தல் அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் குரல் எழுப்பப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

