தமிழ்நாடு

செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் செயலி உருவாக்கும் 3 நாள் பயிற்சி: தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!

சென்னை, செப். 17:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) சார்பில் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி செயலிகள் உருவாக்கும் மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், வரும் செப்டம்பர் 23, 2026 முதல் செப்டம்பர் 25, 2026 வரை இம்மாபெரும் நேரடிப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. தினசரி காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முழுநேரப் பயிற்சியாக இது நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் பங்கேற்பாளர்கள் தங்களுடைய புதிய யோசனைகளை நடைமுறைப்படுத்தக்கூடிய AI Prototype செயலிகளாக மாற்றும் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளலாம். குறிப்பாக, முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் No-Code மற்றும் Low-Code AI கருவிகள், Prompt Engineering முறைகள் குறித்து விரிவான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், ChatGPT, Gemini Pro, NotebookLM மற்றும் Lovable உள்ளிட்ட முன்னணி ஏஐ தளங்களைப் பயன்படுத்தி செயலிகளை நேரடியாக உருவாக்கும் பயிற்சிகளும் இடம்பெறும்.

அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் மூலம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த இணையதளங்கள் மற்றும் செயலிகளை உருவாக்குதல், தொழில் மற்றும் தனிநபர் தேவைகளுக்கான தானியங்கி (Automation) முறைகள், கல்வி, சுகாதாரம், நிதி மற்றும் சில்லறை வணிகத் துறைகளுக்கான பயன்பாட்டு மாதிரிகளைத் தயாரிப்பது குறித்து விளக்கப்படும். இதன் மூலம் உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் AI MVP (Minimum Viable Product) மாதிரிகளை உருவாக்கி, முதலீட்டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறனைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன