தாராபுரம் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனின் சொத்து விவரங்கள் வெளியீடு!
தாராபுரம், செப். 17: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லட்சுமணன் தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனு விவரங்களின்படி, வேட்பாளர் லட்சுமணன் 9-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். அவரிடம் தற்போது கையிருப்பில் உள்ள ரொக்கப் பணம் வெறும் ரூ.5,000 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது மொத்த அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.7,000 ஆக உள்ளது. அவருக்கு நிலம், வீடு உள்ளிட்ட அசையா சொத்துகளோ, தங்க நகைகளோ, சொந்த வாகனங்களோ மற்றும் வங்கிக் கடன்களோ ஏதுமில்லை என்று வேட்புமனுவில் மிக எளிய முறையில் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார். எளிய பின்னணியைக் கொண்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரின் இந்த சொத்து விவரம் தொகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
