புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி தீவிர வாக்குசேகரிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தீவிரமடைந்து வரும் நிலையில், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசோக் ஆனந்தை ஆதரித்து முதலமைச்சர் என்.ரங்கசாமி இன்று தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

தொகுதிக்குட்பட்ட முக்கியப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் அசோக் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடம் தங்கள் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி வளர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட உள்ள எதிர்காலப் பணிகள் குறித்து எடுத்துக்கூறி வாக்கு கேட்டார்.

முதலமைச்சரே நேரடியாகக் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது தட்டாஞ்சாவடி தொகுதி மக்களிடையேயும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்சார நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், முன்னணித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன