காரைக்கால்

காரைக்கால் துறைமுக விரிவாக்க திட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு: கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கொந்தளிப்பு!

காரைக்கால் தனியார் துறைமுகத்தை நான்கு மடங்கு விரிவுபடுத்தும் திட்டத்திற்கு, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம் சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக தீவிர விவாதங்கள் எழுந்தன.

காரைக்கால் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை ஆண்டுக்கு 21.5 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 100.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்த்தவும், துறைமுக பரப்பளவை 243 ஹெக்டேரில் இருந்து 492 ஹெக்டேராக விரிவாக்கவும் திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக கடலில் 19.5 கி.மீ தொலைவில் கச்சா எண்ணெய் கையாளும் ஒற்றை முனை மிதவை (SPM) அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி.கே. நிஜாமுதீன் மற்றும் அரசியல் கட்சியினர், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடல் வளம் மற்றும் நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படும் என எச்சரித்தனர். தற்போதுள்ள துறைமுக செயல்பாடுகளாலேயே கடல் சூழல் மாசடைந்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் விரிவாக்கம் செய்வது கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் என்று மக்கள் தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன