எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள் கணிதா சம்பத், பானுமதி!

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை, சட்டமன்றத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. கணிதா சம்பத் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி. கே. பானுமதி ஆகியோர் கழகப் பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, தேர்தல் களப்பணிகள், வாக்கு சேகரிப்பு உத்திகள் மற்றும் பொதுமக்களின் ஆதரவை திரட்டுவது குறித்து வேட்பாளர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முக்கிய அறிவுரைகளையும், தேர்தல் வெற்றிக்கான வாழ்த்துகளையும் வழங்கினார்.
📸 புகைப்படத் தொகுப்பு (Photo Gallery)



