புதுச்சேரி
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் வி.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் ஆர். செல்வம், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ். செல்வ கணபதி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் “சேவா சங்கல்ப் அபியான்” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய மக்கள் நலப் பணிகள், சேவைத் திட்டங்கள் மற்றும் களப்பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

