புதுச்சேரி

வாழைக்குளம் குடியிருப்புகளைப் புதுப்பிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ. விக்னேஷ் கண்ணன் கோரிக்கை!

புதுச்சேரி:

புதுச்சேரி வாழைக்குளம் முருகேச கிராமணி குடியிருப்புகளை உடனடியாகப் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சரிடம் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ. கொண்டு சென்றார். அப்போது, வாழைக்குளம் முருகேச கிராமணி பகுதியில் உள்ள குடியிருப்புகளை முழுமையாக ஆய்வு செய்து, உடனடியாகப் புதுப்பிப்பதற்கான பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கழிவறை வசதி இல்லாமல் உள்ள வீடுகளுக்கு, சுகாதார நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக அரசு சார்பில் கழிவறைகள் கட்டித் தரப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன