புதுச்சேரி

புதுச்சேரியில் வீடு தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்: எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்!

புதுச்சேரி: புதுச்சேரியில் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இருக்கும் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையிலான விரிவுபடுத்தப்பட்ட ‘வீடு தேடி மருத்துவம்’ திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் ‘வீடு தேடி மருத்துவம்’ திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி விரிவுபடுத்தும் நோக்கில், மார்டின் அறக்கட்டளை சார்பில் HelpAge India தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலமாக ‘Charles Martin Community Palliative Care Program’ என்ற சிறப்பு வீடு தேடி மருத்துவ சிகிச்சைத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், குத்துவிளக்கேற்றி புதிய திட்டத்தை முறைப்படி பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முடியாத முதியவர்கள், படுக்கையில் உள்ள நோயாளிகள் மற்றும் தீவிர தொடர் சிகிச்சை தேவைப்படுவோரின் இருப்பிடத்திற்கே சென்று மருத்துவக் குழுவினர் தேவையான பரிசோதனைகளையும் ஆதரவு சிகிச்சைகளையும் வழங்க உள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன