தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உடன் பிரிட்டிஷ் துணைத் தூதர் மரியாதை நிமித்த சந்திப்பு!

சென்னை, செப். 2: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை, தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரிக்கான பிரிட்டிஷ் துணைத் தூதர் (பொறுப்பு) டாக்டர் ஷுதாபா சௌத்ரி (Dr. Sutapa Choudhury) மற்றும் அரசியல் பொருளாதார ஆலோசகர் திருமதி கிருபா ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், பிராந்திய வளர்ச்சித் திட்டங்கள், வணிகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு சுமூகமாக அமைந்தது.
தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை பிராந்தியங்களின் தொழில்துறை, கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

