புதுச்சேரி

ECR கொக்கு பார்க் பகுதியில் பேரிகாடுகளை அகற்றக் கோரிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. நேரு மனு!

புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை (ECR), கொக்கு பார்க் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளை (Barricades) உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. நேரு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

நேயம் மக்கள் கழகத்தின் (நே.ம.க) தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி. நேரு (என்ற) குப்புசாமி, தொகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, கொக்கு பார்க் சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளால் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஆட்சியரிடம் விவரித்தார்.

முக்கிய பிரதான சாலையான ECR வழியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கொக்கு பார்க் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகாடுகளால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்து போக்குவரத்தைச் சீரமைக்க அந்தத் தடுப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன