காரைக்கால்

காரைக்காலில் பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!

காரைக்கால்: காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மாணவர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் மேலகாசாக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திரு. சோமு @ இளங்கோவன் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் கலந்துகொண்டார்.

பள்ளி வளாகத்தில் திரண்டிருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையே அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடி தனது பிறந்தநாள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன