புதுச்சேரி

புதுச்சேரி – திருப்பதி இடையே விமான சேவை: மத்திய அமைச்சரிடம் மல்லாடி கிருஷ்ணராவ் நேரில் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குப் புதிய விமான சேவைகளைத் தொடங்குவது தொடர்பாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடுவை புதுச்சேரி அரசின் சிறப்புப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் நேரில் சந்தித்துப் பேசினார்.டெல்லியில் உள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, புதுச்சேரி விமான நிலையத்தின் உட்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்துவது மற்றும் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து மத்திய அமைச்சருடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், புதுச்சேரியிலிருந்து திருப்பதி, சென்னை மற்றும் கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்குப் புதிய பயணிகள் விமான சேவைகளை உடனடியாகத் தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மல்லாடி கிருஷ்ணராவ் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார். இப்புதிய விமான வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்தால் சுற்றுலா, ஆன்மீகப் பயணம் மற்றும் வணிக வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன