அரசியல்

கோவை விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!

கோவை: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான மற்றும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்வில் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் முன்னிலையில் திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு அவருக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர் செ.மா.வேலுச்சாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஈரோடு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.செல்வராஜ், அம்மா பேரவை இணைச்செயலாளர் கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன