மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேலுடன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சந்திப்பு: புதுச்சேரி வளர்ச்சி குறித்து ஆலோசனை!

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை தந்துள்ள மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் அவர்களை, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
இச்சந்திப்பின் போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பிராந்தியத்தின் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த அம்சங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம், அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்து மத்திய அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.
