அரசியல்
செய்தியாளர்களைக் கண்டு நான் ஓடுவதாகக் கூறுவது தவறு: ஆனந்த் விளக்கம்
சென்னை: செய்தியாளர்களைக் கண்டு தான் ஓடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “செய்தியாளர்களைப் பார்த்து நான் ஓடுகிறேன் எனக் கூறுகிறார்கள். நீங்கள் உங்களுக்கென ஒரு நிறுவனம் அமைத்து, குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்கச் சொல்லி எங்களை ட்ரோல் செய்ய முயற்சிக்கிறீர்கள். ‘என்ன நலத்திட்டங்களைச் செய்தீர்களோ அதை மட்டும் சொல்லுங்கள்’ என்று மைக்கை நீட்டுவார்கள்.
உடனே நீங்கள் சொல்லிக் கொடுத்த சில குறிப்பிட்ட கேள்விகளை முன்வைப்பார்கள். ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். ஆனால், அவர்கள் கடந்த 75 வருடங்களாக உங்களுடனேயே பழகிவிட்டார்கள். இப்போதுதான் எங்களுடன் பழகத் தொடங்கியிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.


