அரசியல்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை:

விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடியில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.23 கோடியே 67 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்வேறு பக்தர்களுக்கான வசதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு திறந்து வைத்தார்.

பிரசித்தி பெற்ற இந்தத் திருத்தலத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அவர்களின் வசதிக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம் மற்றும் விருந்து மண்டபங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

மேலும், திருக்கோயில் வளாகத்தில் முறைப்படுத்தப்பட்ட வர்த்தக வசதிகளை ஏற்படுத்தும் வகையில் 235 புதிய பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன