அரசியல்

புதுச்சேரிக்கு புதிய சட்டப்பேரவை வளாகம் தேவை: எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தல்!

புதுச்சேரி: புதுச்சேரி அரசுக்கு நவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் புதிய கட்டிடத்திலேயே நடைபெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற நிர்வாகம் மற்றும் தலைமைச் செயலகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலக நிர்வாகக் கட்டமைப்பில் பல்வேறு நிர்வாகச் சிக்கல்களும், ஆயிரம் ஓட்டைகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், மக்களாட்சியின் ஜனநாயக மாண்பைப் பாதுகாக்கும் வகையிலும் விசாலமான புதிய சட்டமன்ற வளாகத்தை விரைந்து அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன