புதுச்சேரி

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கை: சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர முதல்வர் ரங்கசாமி முடிவு!

புதுச்சேரி: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கும் வகையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வர முதலமைச்சர் என்.ரங்கசாமி முடிவு செய்துள்ளார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு மட்டுமின்றி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரும் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். இதனால் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, காரைக்கால் விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேகதாது அணை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன