புதுச்சேரி

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; யோகா பயிற்றுநர்களுக்கு சம்பள உயர்வு: முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு!

புதுச்சேரி, ஆக. 31: புதுச்சேரி அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கவும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றி வரும் ஒப்பந்த யோகா பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களது மாதாந்திர ஊதியம் ரூ.15,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த ஊதிய உயர்வு யோகா பயிற்றுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும், புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை விரைவில் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன