அரசியல்

திமுக மறுசீரமைப்பு: விழுப்புரம் மாவட்ட பிரதிநிதியாக புதுச்சேரி அமைப்பாளர் இரா.சிவா நியமனம்!

புதுச்சேரி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்கட்சி மறுசீரமைப்பு பணிகளை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்திற்கான தலைமைக் கழகப் பிரதிநிதியாக புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் மேனாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழகத்தின் அமைப்பு ரீதியான பணிகளை ஒருங்கிணைக்கவும், கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தின் களப்பணிகளை ஆய்வு செய்து வழிநடத்தும் முக்கியப் பொறுப்பு இரா.சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கழகத் தலைமையால் தனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பொறுப்பைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தோழமைக் கட்சியினர் இரா.சிவாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன