புதுச்சேரி

காமராஜ் நகருக்கு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய குடிநீர் குழாய்கள் அமைக்க வேண்டும்: எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கை!

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி மக்களின் நலன் கருதி பிரத்யேக ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் ஜோஸ் சார்லஸ் மார்டின் புதுச்சேரி அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கைகளில், காமராஜ் நகர் தொகுதிக்கு என தனியாக ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் அமைத்துத் தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தொகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்து வரும் பழைய குடிநீர் குழாய்களை முழுமையாக அகற்றிவிட்டு, புதிய குடிநீர் குழாய்களைப் பதித்து தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை நவீன முறையில் மறுசுழற்சி செய்து, அதன் மூலம் பயனுள்ள திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தொகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ ஜோஸ் சார்லஸ் மார்டின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன