புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை முதல் கூட்டம் நிறைவு: அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்து!

புதுச்சேரி:
புதுச்சேரி 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் சிறப்பு மதிய விருந்து அளித்து உபசரித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 16-வது கூட்டத்தொடர் அண்மையில் கூடி முக்கிய விவாதங்களுடன் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் கூட்டம் இனிதே நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நல்லுறவு மதிய விருந்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். கூட்டத்தொடர் சுமூகமாக நிறைவடைந்ததை ஒட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியல் கட்சிப் பாகுபாடின்றி சிநேகபூர்வமாக கலந்துரையாடி மகிழ்ந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன