புதுச்சேரி

புதுச்சேரி பாத்திமா பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் வழங்கி வாழ்த்து

புதுச்சேரி: புதுச்சேரி பாத்திமா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் உடற்கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேரில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசிய ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக உருவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மாணவர்களின் வாழ்க்கைக்கு கல்வி மிகவும் இன்றியமையாதது என்றும், பெற்றோர்களின் தியாகம் மற்றும் கஷ்டங்களை முழுமையாக உணர்ந்து பொறுப்புடன் படித்து முன்னேற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

அதே வேளையில், கல்விக்கு இணையாக உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், விளையாட்டிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு கல்வியையும் ஆரோக்கியத்தையும் சமமாக பேணி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். இந்த உபகரணங்கள் பள்ளியின் விளையாட்டு வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன