தமிழ்நாடு

ஓசூரில் 4 வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்: 7 கிராம மக்கள், மாணவர்கள் பயன்பெறும் புதிய திட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட 4 பேருந்துகளின் சேவை கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு புதிய வழித்தடப் பேருந்துகளை கொடியசைத்து முறைப்படி இயக்கி வைத்தனர்.

இந்த வழித்தட நீட்டிப்பு மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 7 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5,000 பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரடியாகப் பயன்பெறுவர். கிராமப்புற மக்களின் போக்குவரத்து சுமையைக் குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன