புதுச்சேரி

நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி: பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய எம்எல்ஏ டாக்டர் விக்கினேஷ்வரன்

புதுச்சேரி, ஆகஸ்ட் 12: நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்கினேஷ்வரன் (MBBS) இன்று (ஆகஸ்ட் 12) கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பூவம் காமராஜர் உயர்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, பள்ளியின் கட்டிடங்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளியின் தற்போதைய நிலை குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்ததுடன், பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன