புதுச்சேரி

புதுச்சேரி சென்டாக்: நான்-நீட் படிப்புகளுக்கான 2-ம் கட்ட தகுதிப் பட்டியல் வெளியீடு – ஆட்சேபனை தெரிவிக்க ஆக. 27 வரை அவகாசம்!

புதுச்சேரி, ஆக. 26: புதுச்சேரி அரசு உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் சென்டாக் (CENTAC), 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத (Non-NEET) இளநிலை தொழில்முறை, கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான 2-ம் கட்ட தகுதியுடைய மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலை மாணவர்கள் சென்டாக் அதிகாரப்பூர்வ இணையதளமான www.centacpuducherry.in வாயிலாகப் பார்வையிடலாம்.

வெளியிடப்பட்டுள்ள தகுதியுடையோர் பட்டியலில், 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள், பாடப்பிரிவு விருப்பங்களை சமர்ப்பித்தவர்கள் மற்றும் 1-ம் கட்டத்தில் சேர்க்கை பெற்ற அனைத்து மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், மாணவர்கள் தங்களது லாகின் (Dashboard) பக்கத்தில் உள்ள ‘Grievances’ வசதி மூலம் ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிற்பகல் 1.00 மணிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முதல்கட்டத்தில் சேர்க்கை பெற்று, 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் தெரிவிக்காத மாணவர்கள் ஏற்கனவே சேர்ந்த அதே படிப்பிலேயே தொடர்ந்து நீடிப்பர். 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தவர்கள் மட்டுமே புதிய இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவர். விருப்பத்தில் ‘NO’ என்று குறிப்பிட்டவர்கள் அல்லது பாடப்பிரிவு விருப்பங்களை காலியாக விட்டவர்களின் விண்ணப்பங்கள் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாது. இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன