புதுச்சேரி

புதுச்சேரியில் நிழல் இல்லா நாள் செயல்முறை விளக்கம்: மாணவர்கள் மனித வளையம் அமைத்து செயல்முறை பயிற்சி

ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரியன் நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் நிழல் இல்லாத நிலை நிகழ்வை விளக்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடைபெற்றது. புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் ரயில் நிலையம் எதிரே உள்ள இருதய ஆண்டவர் பள்ளி வளாகத்தில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மதியம் 12:15 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவ-மாணவியர் கைகோர்த்து மனித வளையம் அமைத்தும் பல்வேறு பொருட்களை தரையில் வைத்தும் நிழல் இல்லா நிலையை நேரில் கண்டறிந்தனர். இந்த அறிவியல் செயல்முறை விளக்கத்தை ஏராளமான பொதுமக்களும் மாணவர்களும் பார்வையிட்டனர்.

In brief (English)

The Puducherry Science Forum organized a practical demonstration of ‘Zero Shadow Day’ for students and the public at Sacred Heart School. Students held hands to form human rings and placed various objects to witness the no-shadow phenomenon between 11:00 AM and 12:15 PM.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன