அரசியல்

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸை நேரில் சந்தித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நன்றி

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி.யை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள அன்புமணி இராமதாஸின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார், அணைக்கட்டு உறுப்பினர் த.வேலழகன், பாப்பிரெட்டிப்பட்டி உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், அரூர் உறுப்பினர் வே.சம்பத் குமார், திருக்கோவிலூர் உறுப்பினர் சு.பழனிச்சாமி மற்றும் பண்ருட்டி உறுப்பினர் தக்காளி கே.மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, மரியாதை நிமித்தமாகவும் தங்களது நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பு அமைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன