18-ல் 8 கோயில்கள் காரைக்கால் தெற்கில் மட்டுமே கும்பாபிஷேகம்: சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ நாஜிம் பெருமிதம்!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஏ.எம்.எச். நாஜிம் பேசுகையில், தனது தொகுதியில் நடைபெற்ற கோயில் திருப்பணிகள் குறித்துப் பெருமிதத்துடன் கருத்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 18 திருக்கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 18 கோயில்களில், காரைக்கால் தெற்கு தொகுதியில் மட்டுமே 8 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என்பதை அவர் அவையில் சுட்டிக்காட்டினார்.
மேலும் பேசிய அவர், இத்திருக்கோயில்களின் திருப்பணிகளுக்காகப் பல கோடி ரூபாய் மதிப்பிலான செலவுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், அரசு தரப்பிலிருந்து வெறும் ரூ.20 இலட்சம் மட்டுமே நிதி உதவியாக வழங்கப்பட்டது என்பதையும் சட்டப்பேரவையில் பதிவு செய்தார்.