புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் நாளை 108 ஆம்புலன்ஸ் இயங்காது: சட்டமன்றத்தை முற்றுகையிட ஊழியர்கள் முடிவு!

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் 6 மாத சம்பள பாக்கியை வழங்கக் கோரி, நாளை 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஓடாது எனவும், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாகவும் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த திடீர் வேலைநிறுத்த அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அவசர கால மருத்துவ சேவைக்காக இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடுமையான குடும்ப சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஊழியர்கள், பலமுறை கோரிக்கை விடுத்தும் சம்பள பாக்கி வழங்கப்படாததால் இத்தகைய போராட்ட முடிவை எடுத்துள்ளனர்.

தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சம்பள பாக்கியை உடனடியாக முழுமையாக வழங்க வலியுறுத்தி, நாளை புதுச்சேரி சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவசர சிகிச்சைக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை முற்றிலும் முடங்கும் சூழல் உருவாகியுள்ளதால், அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன