புதுச்சேரி
புதுச்சேரியில் பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு விழா: முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ நாராயணசாமி பங்கேற்பு!
புதுச்சேரி: புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பெத்திசெமினார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பாரிஸ் மறைபரப்பு சபையின் 250-வது ஆண்டு நினைவு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் திரு. N. ரங்கசாமி மற்றும் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சபை ஆற்றிய ஆன்மீக மற்றும் சமுதாய கல்விப் பணிகளை விழாவில் பிரமுகர்கள் நினைவுகூர்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கிறிஸ்தவ பேராயர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அருட்சகோதரர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.