தேசியம்
தில்லியில் ‘மங்கள் மிலன்’ கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்றக் குழுக் கூட்டமான ‘மங்கள் மிலன்’ நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, தற்போதைய பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இதில் பங்கேற்று, நாடாளுமன்ற அமர்வுகளின் ஒருங்கிணைப்பு, சட்டப் பணிகள் மற்றும் அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர்.
என்டிஏ கூட்டணிக்குள் மேலும் ஒற்றுமையை வலுப்படுத்தி, மக்களிடம் எடுத்துக்கொள்ளப்படும் செய்தி மற்றும் அரசின் சாதனைகள் குறித்து ஒரே கோட்டில் செயல்பட வேண்டும் என்பதே இந்த ‘மங்கள் மிலன்’ கூட்டத்தின் நோக்கமாக இருப்பதாக குறிப்பிடப்படுகிறது.



