தமிழ்நாடு

தமிழகத்திற்கு 15 டிஎம்சி காவிரி நீர் திறக்க பரிந்துரை

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 15 டிஎம்சி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில், தமிழகத்தின் நீர்த் தேவையை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும், இது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவு அல்ல. ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னரே கர்நாடகாவுக்கு அதிகாரபூர்வ உத்தரவு பிறப்பிக்கப்படும்.

முன்னதாக, ஜூலை 28-ஆம் தேதி கர்நாடகா வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு நீர் வழங்க வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. அந்த உத்தரவை காவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 30-ஆம் தேதி உறுதி செய்திருந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன