தமிழ்நாடு

4 லட்சம் விவசாயிகளுக்கு மண்நல அட்டைகள் வழங்க நடவடிக்கை

மண்வளத்தை அறிந்து அதற்கேற்ப சமசீர் உரப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ₹4 கோடி மாநில நிதி ஒதுக்கீட்டில் மண்நல அட்டைகள் வழங்கப்படும். இதுதவிர உழவர் அடையாள எண் பெற்ற சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ் ₹6.16 கோடி நிதி ஒதுக்கீட்டில் மண்நல அட்டைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் உழவர்கள் தங்கள் நிலத்திற்கு தேவையான உரங்களை மட்டுமே சரியான அளவில் பயன்படுத்த முடியும்.

In brief (English)

The Tamil Nadu government will distribute soil health cards to four lakh farmers using state and central funds to promote balanced fertilizer use. One lakh farmers will receive cards funded by the state, while three lakh registered farmers will be covered under a joint scheme.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன