தமிழ்நாடு
பசுந்தாள் உர விதைகள் மற்றும் உழவு மானியத்திற்கு ₹63.50 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் மண்வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிற்கு தேவையான தக்கைப்பூண்டு, சனப்பு போன்ற பசுந்தாள் உர விதைகளும், 22,000 ஏக்கருக்கு தானிய விதைகளும் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் வளர்ந்த பசுந்தளைகளை நிலத்திலேயே மடக்கி உழுது மட்க செய்திடும் வகையில் ஏக்கருக்கு ₹3,000 உழவு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்திற்காக மாநில நிதியிலிருந்து ₹63.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
In brief (English)
Tamil Nadu has allocated Rs 63.50 crore to supply green manure seeds at subsidized rates and offer a ploughing subsidy of Rs 3,000 per acre to enrich soil organic matter.