தேசியம்
யுஜிசி புலமைப்பரிசில்: 15 நாளில் விண்ணப்பங்களை சரிபார்க்க நிறுவனங்களுக்கு உத்தரவு
தேசிய புலமைப்பரிசில் தளம் (என்எஸ்பி) மூலம் முதுநிலைப் படிப்புகளுக்கான தேசிய புலமைப்பரிசில் திட்டம் மற்றும் வடகிழக்கு மாநில மாணவர்களுக்கான ‘ஈஷான் உதய்’ சிறப்பு புலமைப்பரிசில் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்க உள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது.
15 நாட்களுக்குள் சரிபார்க்க உத்தரவு
இத்திட்டங்களின் கீழ் பெறப்படும் மாணவர்களின் விண்ணப்பங்களை, பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் உயர்கல்வி நிறுவனங்களின் நோடல் அதிகாரிகள் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கவோ, தவறுகளைச் சுட்டிக்காட்டவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
விண்ணப்பங்களில் ஏதேனும் குறைகள் அல்லது பிழைகள் இருந்தால், இணையதளம் மூடப்படுவதற்குள் மாணவர்கள் அவற்றைச் சரிசெய்ய போதிய கால அவகாசம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.