புதுச்சேரி
பாகூரில் ₹15,000 லஞ்சம் வாங்கிய மின்துறை லைன் இன்ஸ்பெக்டர் கைது
புதுச்சேரி பாகூர் பகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் பரமசிவத்திடம் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்க தவளக்குப்பம் மின்துறை லைன் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ₹15,000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து பரமசிவன் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பினர். அப்பணத்தைப் பெற்ற ஆறுமுகத்தை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். ஆறுமுகம் மீது ஏற்கனவே பல லஞ்ச புகார்கள் உள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
In brief (English)
Vigilance police caught an electricity department line inspector red-handed while receiving a ₹15,000 bribe in Bahour to restore a hotel’s power connection.

