தேசியம்

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: கைதான மாணவர்களை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற மாணவர்கள் மற்றும் அமைப்பினர் மீது போலீசார் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான பொதுநல மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாணவர் மீது நேரடியாக கண்ணீர்ப்புகை மற்றும் லத்திசார்ஜ் பயன்படுத்தப்பட்டது குறித்து நடுநிலையான விசாரணை தேவை என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், குற்றப்பின்னணி இல்லாத கைதான மாணவர்களை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்தனர். மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசியக்கூடாது என்றும், சம்பவ இடத்து சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கும் 8 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

In brief (English)

The Supreme Court has ordered the immediate release of students without criminal antecedents who were arrested during protests against NEET irregularities in Delhi. The court also directed authorities to protect the privacy and identity of the protesting students.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *