தமிழ்நாடு
தங்கம் விலை அதிரடி சரிவு: சவரனுக்கு ₹1,240 குறைந்து விற்பனை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,240 குறைந்து ₹57,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகைப் பிரியர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய சந்தை மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
In brief (English)
Gold prices registered a major drop today with a decrease of Rs 1,240 per sovereign. The precious metal is currently retailing at Rs 57,200 per sovereign across major Tamil Nadu cities.