தேசியம்
அந்தமான் தீவுகளில் தேசியக் கொடி ஏற்றிய துணைக் குடியரசுத் தலைவர்
அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள ஃபிளாக் பாயிண்டில், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தேசியக் கொடியை ஏற்றினார். ‘ஹர் கர் திரங்கா’ இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
ஸ்ரீ விஜயபுரம் ஃபிளாக் பாயிண்ட் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இதே இடத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தேசியக் கொடியை ஏற்றி, அந்தமான்-நிக்கோபார் தீவுகள் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தார்.
ஆகஸ்ட் 9, ‘வெள்ளையனே வெளியேறு இயக்க நாள்’ அல்லது ஆகஸ்ட் புரட்சி நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைந்தது.