புதுச்சேரி

வில்லியனூரில் அமையவுள்ள உள்விளையாட்டு அரங்கம், கால்பந்து மைதானம்: எம்.எல்.ஏ. ரவிக்குமார் நேரில் ஆய்வு!

புதுச்சேரி: வில்லியனூர் தொகுதியில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் நலனுக்காகப் புதிய உள்விளையாட்டு அரங்கம் (Indoor Stadium) மற்றும் கால்பந்து மைதானம் அமைப்பதற்கான இடத்தினை வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப. ரவிக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட சர்வே எண் 246/1-ல் அமைந்துள்ள அரசு நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விரிவான கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது துறை சார்ந்த துணை இயக்குநர் வி. வைத்தியநாதன் மற்றும் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்து மைதானத்திற்கான நில அளவீடு மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ஆய்வின் முடிவில், இத்திட்டத்திற்கான விரிவான திட்ட வரைவு மற்றும் அரசு கோப்புகளை உடனடியாகத் தயார் செய்து, துறை ரீதியான பணிகளை விரைந்து மேற்கொள்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன