துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து நன்றி கடிதம் வழங்கிய தற்காலிக சபாநாயகர் அன்பழகன்!
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு. கே. கைலாஷ்நாதன் அவர்களை, சட்டப்பேரவையின் தற்காலிக தலைவர் திரு. ஏ. அன்பழகன் அவர்கள் நேரில் சந்தித்து சட்டப்பேரவை சார்பில் நன்றி கடிதத்தை முறைப்படி வழங்கினார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் திரு. K. கைலாஷ்நாதன் அவர்கள் கடந்த 24.08.2026 அன்று முறைப்படி உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான பிரேரணை பேரவையில் முன்மொழியப்பட்டு, கடந்த 27.08.2026 அன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை, மாண்புமிகு தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் திரு. A. அன்பழகன் அவர்கள் துணைநிலை ஆளுநரை நேரில் சந்தித்து அவரிடம் வழங்கினார்.
