புதுச்சேரி
தேங்காய் திட்டு வடபத்திரா காளியம்மன் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு, 108 திருவிளக்கு பூஜை
புதுச்சேரி தேங்காய் திட்டு வடபத்திரா காளியம்மன் ஆலயத்தில், இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலட்சுமி நோன்பை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு, மகாலட்சுமி அம்சமாக பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.
கோவில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற வரலட்சுமி நோன்பு மற்றும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து பூஜையில் பங்கேற்று விளக்குகளுக்கு வழிபட்டனர். பூஜை நிறைவில் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும் விழா குழுவினரும் சிறப்பாக செய்திருந்தனர்.
In brief (English)
Special Varalakshmi Nombu prayers and a 108-lamp pooja were held at Thengai Thittu Vadapathira Kaliyamman temple, Puducherry.