புதுச்சேரி
வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் மீனவர்களுக்கு தூண்டில் வளைவு: மீன்வளத்துறை அமைச்சரிடம் விக்னேஷ் கண்ணன் மனு
புதுவை ராஜ்பவன் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வைத்திக்குப்பம் மற்றும் குருசுக்குப்பம் பகுதிகளை சேர்ந்த மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைத்து தருமாறு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் கண்ணன் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
தூண்டில் வளைவு இல்லாத காரணத்தால் இப்பகுதி மீனவ மக்களும் அவர்களது குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை அடைந்து வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை பரிசீலித்த மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
In brief (English)
Rajbhavan constituency MLA Vignesh Kannan has petitioned the Fisheries Minister for a fishing groyne at Vaithikuppam and Kurusukuppam, a long-standing demand of local fishermen.

